Friday, October 1, 2010

கலை

அலை கடல் வீசும் ஒலியிலும்
முளைக்கும் முளையே கலையே!....

தாகம் தீர்க்கும் மேகம் கலையே
இத‌ர்கோர் விலைதான் இங்கிலையே!....

புவியில் புதிதாய் விதைத்த‌ விதையில்
தழைத்த தழையும் கலையே!....

உயிரின் ஒட்டம் உதிரம் தானே
உதிரத்தில் பெய்யும் மழையும் கலையே!....

வயலில் உழுகையில் உழவன்
விதையுடன் விதைத்ததும் கலையே!....

கிளையில் வளரும் குயிலின்
கூட்டில் இசைக்கும் இசையும் கலையே!....

அன்றும் இன்றும் மலையிலும் பிழைத்த‌
மழையைக் கூட அழைப்பதும் கலையே!....

கலையே!கலையே! பிழையே இல்லா
அமிர்தச் சுளையே!...

இக்கலையின் கருவே கலைவாணியே
என்னுள் வருவாய் நீயே!...

நிலையே இல்லா என்மதி தன்னை
சிலையாய் நீயே சிற்பிப்பாயே!.....